சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்த நியமனம் தொடர்பாக அரசு இந்துசமய அறநிலையத்துறைக்குத் தெரிவித்து சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி மற்றும் அவரது குழுவினருக்குத் தேவையான ஆவணங்களை வழங்குவதுடன், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கான செலவினங்களை கவனிக்க அரசு தனிப்பிரிவை உருவாக்கி, விசாரணையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகளை எந்தவிதமான தாமதமுமின்றி அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நான் எதிர்பார்க்கவில்லை. முழு மனநிறைவுடன் ஓய்வு பெற இருந்த எனக்கு இந்த உத்தரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஜி-யாக ஓய்வு பெற்ற நான், இனி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றுவேன். சிலை கடத்தல் வழக்குகளின் விசாரணையை ஓராண்டுக்குள் முடிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுப்பேன். எனக்கு அளிக்கப்பட்ட அதிகார வரம்பை மீறி நான் செயல்படமாட்டேன். உயர்நீதிமன்றம், அரசு, சட்டம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டே நான் செயல்படுவேன் என்றார்

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி-யாக கரூர் தமிழ்நாடு காகித ஆலை லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங்கை நியமனம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன்மார்டி உத்தரவிட்டார். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தொடங்கப்பட்ட நாள் முதல் ஐஜி அளவிலான அதிகாரிகளே, அப்பிரிவுக்கு நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், இம்முறை ஐஜி அளவிலான பதவி, ஏடிஜிபியாக பதவியாக உயர்த்தப்பட்டு அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு செவ்வாய்கிழமை மேல்முறையீடு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here