பொன்னியின் செல்வன் – ஆவலாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக ஐஸ்வர்யா ராய் தகவல்

0
166

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகும் முன்பு, அப்படத்தில் நடிப்பதற்கு ஆவலாகவும், மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் காத்திருப்பதாக ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை மணிரத்னம் திரைப்படமாக எடுக்கிறார். இந்தப் படத்தில் நடிக்க கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். நாவலில் வரும் நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக கூறப்பட்டது. 

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் அளித்த பேட்டியின் போது தனது குருவுடன் மீண்டும் பணிபுரிய ஆவலாகவும், மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் காத்திருப்பதாக கூறினார். பொன்னியின் செல்வனில் தான் நடிக்கயிருப்பதையே இப்படி ஐஸ்வர்யா ராய் குறிப்பிட்டார்.

மணிரத்னத்தின் இருவர் படத்தின் மூலம் திரையுலகுக்கு வந்தவர் ஐஸ்வர்யா ராய். அவரது குரு, ராவணன் ஆகிய படங்களிலும் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளது முக்கியமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here