பொது பாதுகாப்புச் சட்டத்தில் ஒமர் அப்துல்லா கைது ; ஜம்மு-காஷ்மீர் அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

0
225

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் தடுப்பு காவல் நீட்டிப்பு குறித்து ஜம்மு-காஷ்மீர் அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழிவகை செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால் நாடாளுமன்ற அவையில் நிறைவேற்றப்பட்டன. 

மத்திய அரசின் இந்த நடவடிக்கையின்போது, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக்  அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் தடுப்பு காவல் நீட்டிப்பு குறித்து ஜம்மு-காஷ்மீர் அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உமர் அப்துல்லாவை பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக அவரின் சகோதரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு பின்னர், ஒமர் அப்துல்லாவை கைது செய்தது குறித்து ஜம்மு காஷ்மீர் அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 2ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here