பொது இடத்தில் ‘தாய்ப்பால்’ கொடுப்பது தவறு…!

0
1109

பொது இடங்களில் ‘கவர்ச்சியாக’, அதாவது பெரும்பான்மை மக்களுக்கு கவர்ச்சி என சொல்லக்கூடிய உடைகளை அணிதல் கூட முகம் சுளிக்க வைக்காது. ஆனால், பொது இடங்களில் ஒரு பெண் தன் குழந்தைக்கு பால் கொடுத்தால் அது தவறு எனவும், முகம் சுளிக்க வைக்கும் காட்சியாகவும் இருக்கிறது. இந்த வீடியோவில் மாடலிங் துறையில் உள்ள பெண்ணையும், குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண்ணையும் எப்படி பொதுமக்கள் பார்க்கிறார்கள் என்பதை காட்டியுள்ளனர். மேலும், அவர்கள் இருவரையும் ஒன்றாக அமர வைக்கும் போது மக்கள் எப்படி பார்க்கின்றனர் என்பதையும் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

எல்லா சமூகத்திலும், குறிப்பாக இந்திய சமூகத்தில் பெண்கள் தங்கள் மார்பகங்களை ஆணுக்காகவும், தங்களுடைய குழந்தைக்கான ஒன்றாகவுமாகத்தான் பார்க்கிறார்கள். அவளுடைய மார்பகத்தின் ‘முலை’ வெளியில் தெரிவது கூட தவறு என்று கருதுகிறது இந்திய சமூகம். அதனால்தான், பொது இடங்களில் பெண்கள் குழந்தைக்கு பால் புகட்டுவது கூட தவறான பார்வையில் பார்க்கப்படுகிறது. இதுகுறித்த முற்போக்கான விழிப்புணர்வு ஆண்கள், பெண்கள் என இருபாலரிடத்திலும் ஏற்படுவது அவசியமாகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்