ஊரடங்கு மட்டும் கொரோனா தொற்று சங்கிலியை உடைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். பொதுமக்கள் ஊரடங்கை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும். அவசியமில்லாமல் வெளியே வர வேண்டாம் என கூறினார். சென்னை கிண்டி கிங் இஸ்டிட்யூட்டில் முன்களப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். கிண்டி கிங் இஸ்டிட்யூட்டில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 104 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். தமிழகத்தில் பல இடங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய புதிய படுக்கைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.
சென்னையில் 37 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என கூறினார். சென்னையில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் நேரடியாக மருத்துவமனைக்கு வர வேண்டாம் என தெரிவித்தார். எந்த இடத்துக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று ஸ்கிரீன் சென்டர்கள் மூலம் அறிந்து கொண்டு அங்கு செல்ல வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் 890 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.