உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான பொட்டேடோ ஸ்மைலி செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – கால் கிலோ,
பிரெட் க்ரம்ஸ் – 3 டீஸ்பூன்,
கார்ன் ஃப்ளார் – 3 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய், உப்பு – தேவைக்கு,
செடார் சீஸ் – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்.

ஸ்மைலி செய்ய…

ஸ்பூன் – 1,
ஸ்ட்ரா – 1,
ரவுண்ட் கட்டர்- 1.

செய்முறை :

>உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து வைத்துக்கொண்டு, ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, பிரெட் க்ரம்ஸ், கார்ன்ஃப்ளார், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, சீஸ் சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

>பிசைந்த மாவில் பெரிய உருண்டையாக எடுத்து அதை நன்றாக உருட்டிக் கொள்ளுங்கள்.

>பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது எண்ணெய் தேய்த்து நடுவில் மாவை வைத்து மூடி சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி போல தடியாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.

>பின் ரவுண்ட் கட்டர் கொண்டு வெட்டி ஸ்ட்ரா கொண்டு கண்கள் போல் இரண்டு ஓட்டை போட வேண்டும்.

>அடுத்து வாய்க்கு ஸ்பூனால் வரைய வேண்டும். இதேபோன்று அனைத்து மாவிலும் செய்து வைக்க வேண்டும்.

>வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து ஸ்மைலிகளை போட்டு பொரித்தெடுத்து டொமேட்டோ கெட்சப் உடன் பரிமாறவும்.

குறிப்பு:
ஸ்மைலிகளை சிப்லாக் பேக் அல்லது பாக்ஸில் போட்டு மூடி ஃப்ரீசரில் வைத்து தேவைப்படும் பொழுது எடுத்து அதிக சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here