தமிழகம் முழுவதும், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (இன்று) உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும், தை முதல் நாளில் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:

pongal-madurai

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்பி உதயகுமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசிக்க, வீரர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். போட்டியில் 950க்கும் மேற்பட்ட காளைகளும், 600க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்