பேஸ்புக் சாமானியர்கள்…

1
634

(நவம்பர் 12,2015இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

மீண்டும் பேஸ்புக் சாமானியர்கள் …

சாமானியர்களாக பேஸ்புக்கில் நுழைந்து சரவெடியாக பதிவு போட்டு லைக்குகளை அள்ளும் நல்லவர்கள் (!!!).
இப்போ இருக்குற அரசியல் களத்துல, பல அரசியல் தலைவர்களும் சமூக வலைத்தளத்துல இருக்குறவங்களை கவர்றதுக்கே ரொம்பக் குட்டிக்கரணம்லாம் அடிக்காங்க, ஆனா நம்ம ஆளுங்க அசால்ட்டா ‘போங்கதம்பி கப்பித்தனமா பேசிகிட்டு’ன்னு ரெண்டே வரில கலாய்ச்சிட்டு போறாங்க. அது நடுவுல அப்பப்ப சொந்த கதை, லவ் பண்றவங்களை நினைச்சி கவிதை எழுதுறது, எங்கயாவது பல்பு வாங்குனது-ன்னு ஸ்டேட்டஸ் போட்டு, ஃபாலோயர்ஸ ஈக்குவலா வச்சிருக்குற நாலு முக்கியப் புள்ளிகள் பத்திய தொகுப்பு…

வல்லவராயன் வந்தியத்தேவன்:

Screen Shot 1937-08-19 at 3.55.56 pm copy

பேராவூரணியைச் சேர்ந்தவர், மகாபாரத சீரியல்ல வர்ற கர்ணனை ரொம்பப் பிடிக்குமாம். அரசியல்ல எல்லா கட்சியையும் வகை தொகையில்லாமல் கிண்டி கிழங்கெடுப்பவர். ரஜினியின் தில்லுமுல்லு படத்தில் ரஜினியை தேங்காய் சீனிவாசன் இன்டர்வியூ பண்ணும் வசனத்தை அப்படியே ‘தி.மு.க ஸ்டாலின்’ பேசினால் எப்படி இருக்கும் எனக் கற்பனையாகக் கலாய்த்திருப்பார். அதைப் பல பேரும் பயன்படுத்த அவர்களுக்கு இவர் நலுங்கு வைத்ததெல்லாம் தனி டிப்பார்ட்மெண்ட்,

அந்தப் பதிவு இதோ:

‘நீங்க தான் ஓட்டு கேக்க வந்ததா, உங்க பேரு’
‘இளைஞரணி தலைவர் கழகத்தின் தளபதி ஸ்டாலின்’
‘ஆமா உங்க பேர யாரு கேட்டாலும் இப்படி தான் முழுசா சொல்லுவீங்களா’
‘ஆமா சார். நம்ம பேர சுருக்குற உரிமை நமக்கு இல்லை. நாம என்ன பெரியாரா, அண்ணாவா, கலைஞரா, அஞ்சா நெஞ்சனா. அதனால தான் என் பேர யாரு கேட்டாலும் 40 வருசத்துக்கு முன்னாடி எனக்கு கொடுக்கபட்ட பதவி இளைஞரணி தலைவர், நானே எனக்கு செல்லமா வச்சுகிட்ட பேரு கழகத்தின் தளபதி, எங்க அப்பா வச்ச பேரு ஸ்டாலின், எல்லாத்தையும் சேர்த்து சொல்லுவேன்’
‘ஓட்டு கேட்டு வந்துருக்கீங்க வேஸ்டி கட்டாம பேண்டு போட்டு வந்துருக்கீங்க’
‘நமக்கு எதிரி ஜாஸ்தி.கோவத்தில எவனாவது வேஸ்டியா அவுத்து விட்டுடானா இருக்குற கொஞ்சம் நிஞ்சம் மானமும் போய்டும் அதான் சார் பேண்ட் போட்டு வந்தேன்’.
‘சினிமாவுல ஏதாவது இன்ட்ரெஸ்ட் உண்டா’
‘அரசியல் பண்ற நேரம் போக அப்பப்ப டைம் கிடைச்சா, அப்பாவும் பெர்மிசன் கொடுத்தா சினிமா பார்ப்பேன் சார்’
‘7G தெரியுமா’
‘இல்ல சார், எனக்கு 2G(ஊழல்) தான் தெரியும்’
‘நான் சொல்றது உலக புகழ் பெற்ற செல்வராகவன் எடுத்த 7G ரெயின்போ காலணி’
‘மன்னிக்கனும் சார். நான் கேள்விபட்டது இல்லை’
‘படிப்புக்கு நடுவுல பொழுதுபோக்கே தவிர, பொழுதுபோக்கே வாழ்க்கை இல்லனு எங்க அப்பா சொல்லிருக்காரு சார்’
‘வேற என்னன்ன சொல்லிகொடுத்துருக்காரு உங்க அப்பா’
‘எங்க அப்பா சொல்வாரு சார், முதல நீ ஒரு சுயநலவாதி, அப்புறம் தான் நீ ஒரு பொதுநலவாதினு’
‘ஓஹோ அதான் இப்படி ஊழல் பண்றீங்களா’
‘பொருளாதார அடிப்படையில பாத்தீங்க நாங்க பண்ண ஊழல்னால எங்க குடும்பமே ஒரு தலைமுறைக்கு உக்காந்து சாப்டும்’
‘அதிகமா ஊழல் பண்ணிருந்தீங்கனா இரண்டு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடலாமே’
‘எத்தனையோ இந்தியர்கள் சாப்ட வழி இல்லாம ரோட்ல இருக்காங்க. நாம சாப்டுற சாப்பாடுக்கு மேல சாப்டுற ஒவ்வொரு பருக்கையும் அடுத்தவனோடதுனு விஜய் சொல்லிருக்காரு சார்’
‘யார் அந்த விஜய்’
‘நீங்க கேள்விபட்டது இல்லையா. ரொம்ப ஆச்சிரியமா இருக்கே’
‘ஆச்சிரிய படுற அளவு அப்படி யார் அவரு’
‘கிபி 2015 வாழுற ஒரு பெரிய மகான். போதிதம்பர் எழுதுன ஓலை சுவடில அவர பத்தி படிச்சுருக்கேன் சார்’
‘நாங்க ஓட்டு போடனுமா இரண்டு பெரிய மனுஷங்க (அழகிரி, கனிமொழி) ரெக்கமண்டேசன் வேணுமே. இருக்கா’
‘நான் படிச்ச படிப்புக்கு போடாதா ஓட்டு, எங்க அப்பா பேருக்கு இல்லாத ஓட்டு, அந்த இரண்டு பேரு சொல்லிதான் போடுவீங்கனா அப்படி ஒரு ஓட்டு எனக்கு வேணாம் சார். நான் வரேன் சார்’
‘கொஞ்சம் நில்லுபா, உனக்கென்ன விஜயகாந்த் மாதிரி பொசுக்கு பொசுக்கு கோவம் வருது. இவ்வளோ சின்ன வயசுல இப்படிபட்ட கொள்கைய வச்சுகிட்டு யாருக்கும் பயப்படாம டான் டான் னு பதில் சொல்றியே உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குபா’
‘உலகத்துல உன்னை விட திருட்டுபய யாரும் இல்லை, அதனால நீ யாருக்கும் பயபடாதே. அதே மாதிரி உன்னைவிட கேனபய யாரும் இல்லை, அதனால யாரை தாழ்வா நினைக்காதே. இதான் சார் எங்க அப்பா எனக்கு சொல்லி கொடுத்த பாடம். இதான் சார் எனக்கு வேதவாக்கு’
‘பாருப்பா உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சு. யாரு உங்க அப்பா’
‘தென்கோடி இலங்கையில ஈழதமிழர்கள் துன்புறுத்தபட்ட போது வடகோடி சென்னையில முதல் ஆளா ஏசி போட்டு படுத்துகிட்டு ஒரு மணிநேரம் உண்ணா விரதம் இருந்தாரே ஒரு மகான் அவர பத்தி கேள்வி பட்டுருக்கீங்களா’
‘இல்லையே’
‘அப்ப அவர் தான் எங்க அப்பா, தமிழ் இன மக்கள் காவலன் கலைஞர் கருணாநிதி’
‘அந்த மகானை தெரிஞ்சுகாதது என்னோடய துரதிர்ஷ்டம்பா’
‘அது என் அதிர்ஷ்டம் சார்’
‘ஏன்’
‘அவர பத்தி உங்களுக்கு தெரிஞ்சு இருந்தா எனக்கு ஓட்டு போட மாட்டீங்க சார்’
‘என்னது’
‘அதாவது அவர பத்தி உங்களுக்கு தெரிஞ்சு இருந்தா என் வாயால அவர பத்தி சொல்ற பாக்கியம் கிடைச்சுருக்காது சார்’
‘உன்னை மாதிரி வீட்டுக்கு ஒரு விவேகாந்தர் இருந்தா நாடே சுபிக்ஷம் ஆயிடும் பா. எங்களுக்கும் ஒரு கொள்கை உண்டு. யாரு அதிகமா பணம் தருவாங்களோ, அவங்களுக்கு தான் ஓட்டு போடுவோம். ஒருவேளை நீ ஜெயிச்சா நீயாவது ஊழல் பண்ணாம ஆட்சி நடத்துபா’…

அதே மாதிரி முதல்வன் படத்துல அர்ஜூன், ரகுவரனை பேட்டி எடுக்குறத அப்படியே நடிகர் விஜயை பேட்டி எடுக்குற மாதிரி இவர் போட்ட பதிவு ஆல்டைம் காமெடி, அஜித் விஜய் ரசிகர்கள் டிவிட்டர்ல, பேஸ்புக்குல சண்டை போடுறாங்களேன்னு ரொம்ப பீல் பண்ணிட்டு, அடுத்த ஸ்டேட்டஸ்ல அண்ணா பேன்ஸ இவர் கலாய்கிறதுதான் செம்ம ஹைலைட்.
இவரோட சில ‘கருத்தான பதிவுகள்’

Sethupathi
Screen Shot 1937-08-19 at 3.53.02 pm

‘ஆப்பநாட்டுக் கொம்பன்’ அப்படின்னா பல பேருக்கு பேஸ்புக்குல தெரியும். தீவிரமான ‘விஜய் சேதுபதி’ ரசிகர். ஆனா ‘விஜய் ரசிகர்களை’ அடிக்கடி பேஸ்புக்குல ‘தெறிக்க விடுறதுல’ இவரோட பார்ட் ரொம்ப அதிகம். எந்தப் போஸ்ட்டுக்கு போனாலும் ஒரே ஒரு ஸ்டிக்கர மட்டும் கரெக்ட்டா ஓட்டிட்டு வந்துருவாப்ல அது இதான்.
Screen Shot 1937-08-19 at 4.10.41 pm
இவரோட “வாட்சிங் புலி” ஸ்டேட்டஸ் பத்தாயிரயித்துக்கும் அதிகமான லைக்க குவிச்சதுல இவர் “அண்ணாவுக்குத்தான்” நன்றி சொல்லிருக்கணும்.
12047049_10200978860671555_1160789221900879376_n

போட்டோ போட்டு அரசியல்வாதிகளோட அறிக்கைகளை காமெடி ஸ்கிரிப்ட்டா மாத்துறது சேதுபதியோட தனி பாணி…

இவர் தெறிக்கவிட்ட சில ஸ்டேட்டஸ்கள்

அக்ஷிதா
Screen Shot 1937-08-19 at 6.49.22 pm

பொதுவா பல பேரும் கவிதை எழுதுனா பேப்பர்ல எழுதுவாங்க. இல்ல நேரடியா பேஸ்புக்குலயே எழுதுவாங்க. ஆனா இவங்க மட்டும் பேப்பர்ல எழுதுன கவிதையை பேஸ்புக்குல போட்ருக்காங்க. ஜே.சி.பி வச்சி இவங்க பழைய பதிவுகளைத் தூர் வாரும்போதுதான் இவங்க ஒரு “கவிஞர்” என்கிற உண்மையை எங்கள் குழு கண்டறிந்தது.

இவரின் கவித்துவமான பதிவுகள்

Priya Darshini R L
Screen Shot 1937-08-20 at 7.27.28 pm

திருநெல்வேலி ஊரு, போட்டோவ பாத்துட்டு ஏதோ பாப்பாவா இருக்கும்னு நெனச்சிப் போயி எட்டி பாத்தா, ஷேக்ஸ்பியருக்கே கிளாஸ் எடுக்குற அளவு எல்லாமே அறிவான பதிவுகளா இருக்குது,
Screen Shot 1937-08-19 at 1.45.37 pm

தி.மு.க வ இவங்க ஓட்டுனாங்கன்னு சொல்லிக்கிட்டு உடன்பிறப்புகள் இவங்ககிட்ட மல்லுக்கட்டி இவங்க அதுக்கு விளக்கப் பதிவெல்லாம் போட்டு, ஒரு பொண்ணு நிம்மதியா அரசியல் ஸ்டேட்டஸ் போட முடியாதா எனப் போராளிகள் எல்லாம் பொங்கியது தனி ட்ராக். ஆனா எல்லாரயும்தான் ஓட்டிருக்காங்க. தற்கொலை பத்திலாம் கொஞ்ச நாளா எழுதிட்டு வந்தாங்க (அவங்களுக்கு என்ன பிரச்சனையோ). காதலில் கலக்குவது எப்படின்னு மூஞ்சி புக்குல பல பேருக்கு கிளாஸ் எல்லாம் வேற எடுத்துருக்காங்க. அதெல்லாம் தனி பதிவா வந்துருக்கு.

செலெக்ட்டடான ஸ்டேட்டஸ்கள்

சாமனியர்கள் பற்றிய தொகுப்புகள் தொடரும்…

1 கருத்து

ஒரு பதிலை விடவும்