பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளவர்கள் இறந்துவிட்டால் அவர்களது Account என்னவாகும் என்பது குறித்து சில தகவல்கள் வருமாறு.

பேஸ்புக் Account வைத்துள்ள ஒருவர் இறந்துவிட்டால், அவரது இறப்பை குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ பேஸ்புக்கிற்கு அறிவிக்க வேண்டும். பின் அவர்கள், இறந்த நபரின் Account-ஐ நிர்வகிக்கலாமா? அல்லது வேண்டாமா? என்பதை தீர்மானிக்க முடியும்.

இறந்தவரின் பேஸ்புக் Account-ஐ நிர்வகிப்பதற்கு அவரது பேஸ்புக் ஐ.டி மற்றும் Password தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதனை பேஸ்புக் நிறுவனத்தின் Legacy Contact வழியாக செய்து கொள்ளலாம். அத்துடன் Legacy Contact திறனையும் அவர்களே நியமிக்க வேண்டும்.

Legacy Contact-ஐ நியமிக்கும் வழிமுறைகள்:

உங்கள் பேஸ்புக் Account-ஐ Log in செய்யவும்.

Window-வின் மேல் வலதுபுறத்தில் உள்ள அம்புக்குறியை Click செய்து, Settings-க்குள் நுழைய வேண்டும்.

இடது பக்கத்தில் உள்ள Menu பட்டியலில், Security விருப்பத்தை Click செய்யவும்.

Security Settings பட்டியலில், Legacy Contact என்கிற விருப்பத்தை Click செய்ய வேண்டும்.
1058842
இறந்த பின்னர் யார் உங்களது Account-ஐ உபயோகிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவரின் பெயரை பதிவிடவும்.

இவற்றை செய்தவுடன், இறந்தவரின் Account-ஐ அவரது நண்பரோ அல்லது உறவினரோ நிர்வகிக்க முடியும். மேலும், Account-ஐ Remove செய்யவும் முடியும். Legacy Contact-ஐ உபயோகப்படுத்த விரும்பாமல், Account-ஐ Delete செய்ய விரும்பினால் மேலே குறிப்பிட்டுள்ள அதே வழிமுறைகளைப் பின்பற்றவும். ஆனால், Legacy Contact ஒன்றை தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, Legacy Contact பிரிவின் கீழே உள்ள Request Account Deletion எனும் link-ஐ Click செய்யவும்.

இவ்வாறாக, நீங்கள் இறந்த பின்னர் உங்களது பேஸ்புக் Account உங்களின் விருப்பப்படி செயல்பட வைக்க முடியும்.

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here