‘‘இளைஞர்களை விட 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் போலி செய்திகளை 7 மடங்கு அதிகமாகப் பகிர்கின்றனர்’’ என்று ஆய்வில் தெரியவந்துள்ளது .

பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான தகவல்கள் வெளியாகின்றன. அவர்கள் படிப்பவர்கள் தங்கள் லைக் , டிஸ்லைக் செய்கிறார்கள் . பலர் அந்த தகவல்களை மற்றவர்களுக்கு ஷேர் செய்கிறார்கள் . ஆனால், சமூகவலைத்தளங்களில் வரும் தகவல்கள் உண்மையா பொய்யா என்பது உறுதியாகத் தெரிவதில்லை.

இதில் போலி செய்திகள், தகவல்களையும் பலர் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்நிலையில், பேஸ்புக்கில் போலி செய்திகள் பரவல் குறித்து அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகம் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆகியவை விரிவான ஆய்வு நடத்தி உள்ளன. இதன் ஆய்வு முடிவுகள் ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது:வயதின் அடிப்படையில் போலி செய்திகள் பரவல் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இளைஞர்களை விட 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7 மடங்கு அதிகமாக போலி செய்திகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வது தெரிய வந்தது.

65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11 சதவீதத்தினர் போலி செய்திகளை பகிர்கின்றனர். அதன் ‘லிங்க்’கை பகிர்கின்றனர். அதற்கு மாறாக 18 வயது முதல் 29 வயதுடைய இளைஞர்களில் வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே அதுபோன்ற செய்திகளை பகிர்கின்றனர்.

வயதானவர்கள் ஏன் அதிகம் போலி செய்திகளை பகிர்கின்றனர் என்பதற்கு சரியான காரணம் தெரியவரவில்லை. எனினும், வயதானவர்களிடம் டிஜிட்டல் அறிவு போதிய அளவுக்கு இல்லாததே இதற்கு காரணம் என்று ஆய்வாளர்களால் ஊகிக்க முடிகிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here