பேருந்து கட்டண உயர்வை மத்திய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றுள்ளார்.

தமிழகத்தில் பேருந்து கட்டணம், கடந்த 2011ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, சனிக்கிழமை (நேற்று) முதல் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேபோன்று பாரதிய ஜனதா கட்சி, தமிழக அரசுக்கு எதிராக ஜன.24 ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ளார். இது குறித்து ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேருந்து கட்டண உயர்வு காலத்தின் கட்டாயம் என்றும், கட்டணம் உயர்த்தினால், ஓட்டு கிடைக்காது என்ற அரசியலிலிருந்து தற்போது தமிழக அரசு வெளியே வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்