அனைவரும் விரும்பும் ருசியான பேரீட்சை பர்ஃபி. சமைத்து அசத்தலாம் வாங்க.

சமைக்க தேவையானவை :

•பேரீட்சை – 1.5 கப்
•காய்ந்த அத்திப் பழம் – 1.5 கப்
•பிஸ்தா – ¼ கப்
•முந்திரி – ¼ கப்
•பாப்பி விதை – 1 மேஜைக்கரண்டி
•பால் – ½ கப்
•பாதாம் – ¼ கப்
•நெய் – 3 மேஜைக்கரண்டி

பேரீட்சை பர்ஃபி செய்முறை :
• 1.
முதலில் அத்திப் பழம் மற்றும் பேரீட்ச்சை பழத்தை ஒரு மைக்ரோ வேவ் பாதுகாப்பு கலனில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ½ கப் பால் சேர்க்கவும். அதனை மைக்ரோ வேவ் அவனில் வைத்து 2 நிமிடம் வேக வைக்கவும்.
• 2.
பின்பு அதனை எடுத்து மிக்சியில் வைத்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும். பின்பு பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். அதே பாத்திரத்தில் 2 மேஜைக்கரண்டி நெய் எடுத்துக் கொள்ளவும்.
• 3.
அதில் பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை போட்டு நன்கு கலக்கவும். பின்பு அதனை மைக்ரோ வேவ் அவனில் வைத்து 1 நிமிடம் வேக வைக்கவும். இப்போது அவை பொன்னிறமாக இருக்கும். பின்பு அவற்றை வேறொரு பாத்திரத்தி்ல் வைக்கவும்.
• 4.
பின்பு மீதமுள்ள நெய்யில் அரைத்த பேரீட்சை மற்றும் அத்தி விழுதை சேர்க்கவும். அதனை மைக்ரோ வேவ் அவனில் வைத்து 2 நிமிடம் வேக வைக்கவும். பின்பு அதனை எடுத்து நன்கு கிளறவும். அதனை மீண்டும் மைக்ரோ வேவ் அவனில் வைத்து 2 நிமிடம் வேக வைக்கவும்.
• 5.
பின்பு அதனுடன் சிறிது நெய் சோக்கவும். பின்பு மீண்டும் அதனை மைக்ரோ வேவ் அவனில் வைத்து 1 நிமிடம் வேக வைக்கவும். பின்பு அதனை எடுத்து நன்கு கிளறவும். பின்பு அதனுடன் வறுத்த பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.
• 6.
பின்பு ஒரு பாத்திரத்தில் அலுமினியத் தாளை வைக்கவும். அதன் மீது சிறிது நெய் தடவவும். பின்பு பேரீட்ச்சை கலவையை அதன் மீது வைக்கவும். கரண்டியின் பின் பக்கத்ததால் அதனை சமப்படுத்தவும்.
• 7.
பின்பு அதன் மீது பாப்பி விதைகளை தூவி விடவும். பின்பு ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். பின்பு அலுமினியத் தாளை நீக்கி விட்டு அதனை சிறிய துண்டுகளாக வெட்டவும். பேரீட்சை பர்ஃபி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here