பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை  கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு     வரையிலான காலக்கட்டத்தில் பிராங்கோ மூலக்கல், 13 தடவை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி குற்றம் சாட்டிடுள்ளார்.

புகார் அளித்து 76 நாட்களுக்கு மேலாகியும் இந்த வழக்கில் விசாரணை முடிவடையவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக,  விடுதியில் அவருடன் தங்கியிருந்த கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் குதித்தனர்.

பேராயர் பிராங்கோ மூலக்கல்லை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 5 கன்னியாஸ்திரிகளில் 4 பேரை கேரளாவில் உள்ள கான்வென்ட்டில் இருந்து வெளியேறும்படி அதன் தலைமை மிஷனெரி உத்தரவிட்டது.

இதனை அடுத்து 5வது கன்னியாஸ்திரியான நீனா ரோஸ் முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு பிற கன்னியாஸ்திரிகளுடன் சேர்ந்து கடிதம் எழுதினார்.  அக் கடிதத்தில் நீனா ரோஸ், என்னை தனிமைப்படுத்தி, துன்புறுத்துவது அவர்களின் நோக்கம். இதுபோன்ற சூழல் ஏற்பட்டால் எனது வாழ்க்கை ஆபத்தில் சிக்கி விடும் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, சமூகத்தின் ஒரு பகுதியாக மற்றும் அன்றாட மத வாழ்க்கையில் இணைந்து செயல்பட நீனா ரோஸ் மறுக்கிறார் என குற்றச்சாட்டு கூறி அவரை இடமாறுதல் செய்து மிஷனெரிகளுக்கான ஒருங்கிணைந்த தலைமை நிர்வாகம் உத்தரவிட்டது.

பேராயர் பிராங்கோ மூலக்கல் கடந்த வருடம் செப்டம்பரில் கேரளாவின் கொச்சி நகரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு  கோட்டயம் மாவட்டம் பலா கிளை சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.  பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், பேராயருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கன்னியாஸ்திரி லூசி கலப்புரா என்பவர் ‘கர்த்தாவின்டே நாமத்தில்’ (கடவுளின் பெயரில்) என்ற சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.  அதில், மத சாமியார்கள் மற்றும் பேராயர்கள் உள்ளிட்டோரின் பாலியல் வன்கொடுமைகள் பற்றி எழுதி உள்ளார்.

‘ஒவ்வொருவரும் அறிந்த, ஆனால் அமைதி காத்து வரும் உண்மைகள் நிறைந்தவையானது’ என இதுபற்றி கூறும் அவர், கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை எனக்கு கசப்புநிறைந்த அனுபவம் ஏற்பட்டது.

சபையில் இருந்து எனக்கு மனதளவிலான கொடுமைகள் நடந்தன. அவற்றை பற்றிய ஒரு பதிவை வைத்திருப்பது சிறந்தது என்று நினைத்தேன். அதனால் சிறுக, சிறுக அதனை பற்றி எழுத தொடங்கினேன்.

பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவுஅளித்த கிறிஸ்தவஆலய தலைவர்கள்,அவர்களுக்கு எதிராகபேச தொடங்கிவிட்டனர். குற்றவாளிக்கு ஆதரவுடன்செயல்படுகின்றனர். இது இயேசுவின்போதனைகளுக்கு எதிரானது.இது, எனக்குவலியை ஏற்படுத்தியது. என்னநடந்து கொண்டிருக்கிறது என்பதுபற்றி வெளியிடப்பட வேண்டும்என நான்நினைத்தேன் என்றுஅவர் கூறியுள்ளார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here