முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வதை எதிர்த்து குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். 

ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான விவகாரம் தமிழக ஆளுநர் முன் இருப்பதால் அந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டது.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக 2014ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கு, எதிர்ப்பு தெரிவித்து ராஜீவ் காந்தியுடன் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது, இதே விவகாரத்தில் மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருந்ததால், அது முடிந்த பிறகே உறவினர்களின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here