பேய் சிரிப்பு சிரிக்கப் போகும் லைலா

0
119

கணவன், குழந்தை என செட்டிலான நடிகை லைலா மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். குழந்தைத்தனமான சிரிப்புக்கு சொந்தக்காரரான அவரை அவரது ரீஎன்ட்ரி படத்தில் பேய் சிரிப்பு சிரிக்க வைக்க இருக்கிறார்கள்.

குழந்தைகள் வளர்ந்த நிலையில், சினிமாவில் மீண்டும் நடிப்பது என முடிவெடுத்து வாய்ப்புக்காக காத்திருந்தார் லைலா. நாயகியாக மட்டுமே நடிப்பேன் என்ற அவரது குழந்தைத்தனமான முடிவை கோடம்பாக்கம் புறந்தள்ள, கடைசியில் யதார்த்தம் புரிந்து குணச்சித்திர வேடத்துக்கு இறங்கி வந்தார். ரைசா வில்சன் நடிக்கும் நாயகி மையப்படமான ஆலிஸில் லைலா ரீஎன்ட்ரியாகிறார். இதில் அவருக்கு பேய் வேடம் என்கின்றன செய்திகள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை பிரேம் பிரேமா காதல் படத்தின் உதவி இயக்குநர் சந்ரு இயக்குகிறார். எழில் அரசு ஒளிப்பதிவு. ஹாரர் படமாக இது தயாராகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here