வினயனின் மலையாளப் படத்தில் பேய் ஓட்டுகிறவராக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

உடல் ஊனமுற்றவர்கள், குள்ள மனிதர்கள் என சினிமாவில் அதிகம் ஒதுக்கப்பட்டவர்களை வைத்து படம் செய்கிறவர் வினயன். அதனாலேயே நட்சத்திர நடிகர்களை இவருக்கு பிடிப்பதில்லை. வினயனின் பரம வைரிகள் மம்முட்டியும், மோகன்லாலும் ஆவார்கள்.

வினயன் இயக்கத்தில் 1999 இல் வெளியான பேய் படம் ஆகாஸ கங்கா (ஆகாய கங்கை). இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை ஆகாஸ கங்கா 2 என்ற பெயரில் எடுத்து வருகிறார். இன்னும் ஒருவாரத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும்.

இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் பேய் ஓட்டுகிறவராக நடிக்கிறார். இவர் முதல் பாகத்தில் நடிக்கவில்லை. இரண்டாவது பாகத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட கதாபாத்திரமாகும்.

ஆகாஸ கங்கா 2 தமிழிலும் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here