பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 வெளியான பேட்ட, விஸ்வாசம் இரண்டும் கமர்ஷியலாக பெரிய வெற்றியை பெற்றுள்ளன. இரண்டு படங்களும் ரசிகர்களின் பேராதரவினை பெற்றுள்ளன. முதல்நாள் வசூலில் பேட்ட, விஸ்வாசம் யார் முந்தியது, பார்ப்போம்.

தமிழகத்தில் விஸ்வாசம், பேட்ட படங்களுக்கு கிட்டத்தட்ட சம அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. எனினும் சென்னை போன்ற நகரங்களில் பேட்டயே முன்னிலையில் உள்ளது. பி அண்ட் சி யில் விஸ்வாசம் அடித்துத் தூக்குகிறது.

முதல் நாளில் இரண்டு படங்களின் வசூல் விவரம்.

பேட்ட தமிழகத்தில் – 23 கோடிகள். உலக அளவில் – 48 கோடிகள்.

விஸ்வாசம் தமிழகத்தில் – 26 கோடிகள். உலக அளவில் – 43 கோடிகள்.

தமிழகத்தில் விஸ்வாசம் முன்னிலை பெற்றுள்ளது. அதேநேரம் வெளிநாடுகளில் பேட்ட முன்னிலை வகிக்கிறது. உலகளாவிய வசூலில் பேட்ட முதலிடம் பிடிக்க, விஸ்வாசம் ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியாகாததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

விஸ்வாசம் படம் குடும்ப ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்திருப்பதால் வரும் நாள்களில் பேட்டயை சுலமாக முன்னேறிச் செல்லும் என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்