பேட்ட படத்தின் விநியோக உரிமையை தயாரிப்பாளர் தாணு வாங்கியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக், சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா நடித்திருக்கும் படம் பேட்ட. அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் முதல் பாடலை டிசம்பர் 3 ஆம் தேதியும், இரண்டாவது பாடலை 7 ஆம் தேதியும் வெளியிடுகின்றனர். மற்ற பாடல்களை டிசம்பர் 9 வெளியிடுகின்றனர். பொங்கலுக்கு படம் திரைக்கு வருகிறது.

சன் பிக்சர்ஸின் சர்கார் படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் விநியோகித்தது. அதில் பல குழப்பங்கள் நடந்ததால் இந்தமுறை பேட்டயின் விநியோக உரிமையை தாணுவிடம் அளித்திருக்கிறார்கள். மிகப்பெரும் தொகைக்கு பேட்ட கைமாறியிருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்