பேட்ட படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவை தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் நடத்துகின்றனர்.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் பேட்ட. இதில் சிம்ரன், விஜய் சேதுபதி, த்ரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார், நவாசுதின் சித்திக் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

பொங்கலுக்கு பேட்ட படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர்கள், படத்தின் முதல் பாடலை டிசம்பர் 3 ஆம் தேதியும், இரண்டாவது பாடலை 7 ஆம் தேதியும், பிற பாடல்களை மொத்தமாக 9 ஆம் தேதியும் வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி 3 ஆம் தேதி மரண மாஸ் என்ற பாடலை வெளியிட்டனர். நாளை மேலுமொரு பாடல் வெளியாகிறது. 9 ஆம் தேதி பாடல்கள் வெளியீட்டு விழாவை சர்கார் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நடந்த தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் நடத்தயிருப்பதாக தகவல் வெளியாகிறது.

பேட்ட படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்