போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் போரட்டம் முடிவுக்கு வந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டிகே ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த வியாழக்கிழமை (ஜன.4) முதல், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் சிஐடியூ, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. இந்தப் போராட்டம் எட்டவாது நாளாக தொடர்கிறது.

இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி என்பவர் தொடர்ந்த வழக்கில், போராட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் தொழிற்சங்கங்கள் தங்களது போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டன. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அரசு பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தால் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்து போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதனையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் போரட்டம் முடிவுக்கு வந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டிகே ரங்கராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”போக்குவரத்து தொழிலாளர்கள் போரட்டம் முடிவுக்கு வந்தது. ஊதிய பிரச்சனை மத்தியஸ்திற்கு விட மாநில அரசு ஏற்பு. உறுதியாக போராடிய அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் வாழ்த்துகள்.ஒத்துழைத்த பொதுமக்களக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்