அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் முறையாக சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சு வார்த்தைக்குப் பின் அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனையை வடகொரியா முழுமையாக நிறுத்தியது. அத்துடன் சர்வதேச கண்காணிப்பாளர்களின் முன்னிலையில், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று முக்கிய அணு ஆயுத உலைகள், ஏவுகணை தளங்கள் உள்ளிட்டவற்றை வடகொரியா இழுத்து மூடியது.

இருப்பினும் வடகொரியா அணுஆயுதங்களை முழுமையாக கைவிட்டு, கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

வடகொரியா தங்கள் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை முழுமையாக அமெரிக்கா நீக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது.

இந்நிலையில் மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கடந்த மாத இறுதியில் வியட்நாமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பின்போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

அதிபர் டிரம்புடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், வடகொரியா தனது தலைநகர் பியாங்காங்கில் உள்ள டோங்சாங்-ரி ராக்கெட் ஏவுதளத்தில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ராக்கெட் ஏவுதளத்தில் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெறுவதை வடகொரியாவின் செயற்கைகோள் படங்கள் காட்டுகின்றன.

இந்த தகவலால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். வடகொரியா தனது ராக்கெட் ஏவுதளத்தை புனரமைப்பது குறித்த செய்தி உண்மையாக இருந்தால், அது தனக்கு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக கூறினார். மேலும் வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here