பேச்சுத்துணை

ஒக்கி பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக #OvercomeOckhi முயற்சி

0
1014

பேரிடர்களின்போது மக்கள் விரும்புவது நம்பிக்கை தரும் சொற்களைத்தான்; ஒக்கி புயல் பேரிடரால் அன்புச் சொந்தங்களை இழந்து தவிக்கும் மக்களை முனைவர் வாசுகி மதிவாணன் தலைமையில் 11 பேர் கொண்ட மனநல ஆலோசனைக் குழு சந்தித்து உரையாடியது. கடலோடிகளது சமூகத்தின் மனசாட்சியாக இருக்கும் எழுத்தாளரும் பேராசிரியருமான வறீதையா கான்ஸ்தந்தின் இந்த முயற்சிக்குத் தலைமையேற்று வழிகாட்டினார். சமூகச் செயல்பாட்டாளர் லோபிதாஸ் இந்த முயற்சியை ஒருங்கிணைத்தார். சகுந்தலா வெங்கட், சாந்தி ராவ், ஆனந்தி கார்த்திக், திவ்யா, சவும்யா, கோமளா விநாயகம், ஸ்வப்னா நாயர், நளினா தேவி, குமரேசன், ராஜன் ஆகியோர் மக்களைச் சந்தித்து பேசினார்கள்.

இப்போது டாட் காம் இந்த எண்ணத்தை #OvercomeOckhi என்ற தலைப்பில் முன்வைத்தபோது இந்த முயற்சிக்காக முழுமூச்சாக இணைந்து பணிபுரிந்த மனிதி பெண்கள் அமைப்புக்கும் மனநல ஆலோசகர்களை ஒருங்கிணைத்த வாசுகி மதிவாணனுக்கும் நன்றிகள் பல; இந்த முயற்சியை மூன்று வருடங்களுக்குத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கான வேலைகளை இப்போது டாட் காம் செய்து வருகிறது. இந்த முயற்சியில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு இதைப் படியுங்கள்.

இந்த முயற்சிக்கு முதல் பயணத் துணையாக இருந்த பர்வீன் டிராவல்ஸுக்கும் நன்றிகள் பல.

Parveen Travels is the first travel partner for the #OvercomeOckhi initiative
Parveen Travels is the first travel partner for the #OvercomeOckhi initiative

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here