பெஸ்ட் பிரதமர் மோடி … அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்; பெஸ்ட் முதல்வர் யோகி ஆதித்யநாத் – இந்தியா டுடே சர்வே

0
241

இந்தியாவை இதுவரை ஆட்சி புரிந்தவர்களில் பிரதமர் மோடிதான் சிறந்த பிரதமர், அவரே மீண்டும் பிரதமராக வேண்டும் என்று இந்தியா டுடே நடத்திய மூட் ஆப் நேஷன் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைடஸ் நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் ஆட்சி கடந்த 6 வருடங்களில் எப்படி இருந்தது என்று ஆய்வு செய்யப்பட்டது. எல்லா வருடமும் இரண்டு முறை இந்த சர்வே எடுக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் 

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் முடிவுகளின்படி இந்தியாவின் சிறந்த பிரதமர் மோடிதான் என்று 44% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது முன்னாள் பிரதமர்கள் நேரு, மன்மோகன் சிங் ஆகியோரை விட பிரதமர் மோடி சிறந்தவர் என்று 44% பேர் கூறியுள்ளனர். அதேபோல் பிரதமர் மோடிதான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று 66% பேர் கூறியுள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திதான் பிரதமராக வேண்டும் என்று 8% பேர் தெரிவித்துள்ளனர். அதேபோல் பிரதமர் மோடியின் ஆட்சி மிக சிறப்பாக இருப்பதாக 78% பேர் கூறியுள்ளனர்.

மேலும் பிரதமர் மோடி சுமாராக ஆட்சி செய்து இருப்பதாக 17% பேர் கூறியுள்ளனர். மோசமாக ஆட்சி செய்து வருவதாக 5% பேர் கூறியுள்ளனர். அதேபோல் மக்கள் மத்தியில் பிரதமர் மோடி 69% பிரபலமாக இருக்கிறார்.மேலும் இப்போது தேர்தல் வைத்தால் பாஜக கூட்டணி 283 இடங்களை பெரும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவின் சிறந்த முதல்வராக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மூட் ஆப் நேஷன் சர்வேயில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதில் இந்தியாவின் அரசியல் நிலவரங்கள் குறித்தும், இந்தியாவின் சிறந்த முதல்வர் யார் என்றும் மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதில் இந்தியாவின் சிறந்த முதல்வராக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மூட் ஆப் நேஷன் சர்வேயில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்றாவது முறையாக இவர் இப்படி இந்த இடத்தை அடைந்துள்ளனர். இவர் 24% வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கடந்த முறையை விட 6 % அதிகம் ஆகும் இது.

முன்பு ஆதித்யநாத்திற்கு அடுத்த இரண்டாம் இடத்தை அரவிந்த் கெஜ்ரிவால் உடன் பகிர்ந்து கொண்ட மேற்கு வாங்க முதல்வர் மமதா பானர்ஜி தற்போது நான்காம் இடத்திற்கு பின் தங்கி உள்ளார். இவருக்கு 9% மக்கள் ஆதரவு உள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 15% வாக்குகள் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி 11 சதவிகிதம் வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். 7% ஆதரவுடன் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே 5 மற்றும் 6ம் இடத்தில் இருக்கிறார்கள். தமிழக முதல்வர் பழனிசாமி இதில் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை

கேரளா முதல்வர் பினராயி விஜயனும் முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை. ஜூலை 15 முதல் ஜூலை 27 வரை இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 12021 பேரிடம் இந்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.67% கிராமத்திலும், 33% நகரத்திலும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட பெரிய மாநிலங்களில் இருக்கும் 97 எம்பி தொகுதிகளில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here