இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமான அசோக் லேலண்ட் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பேருந்து, கனரக வாகனங்கள்  உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் ஜூலை – செப்டம்பர் காலாண்டுக்கான வருவாய் விவரங்கள் இன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 30ஆம் தேதி நிறைவடைந்த காலாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனத்துக்கு ரூ.38.9 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது 2018ஆம் ஆண்டு கிடைத்த லாபத்தை விட 92.6 சதவீதம் குறைவாகும். அப்போது ரூ.527.7 கோடி லாபத்தை இந்நிறுவனம் ஈட்டியிருந்தது.

நிறுவனத்தின் செயல்பாடுகள் வாயிலான வருவாய் 48.4 சதவீதம் வீழ்ச்சி அடைந்து ரூ.3,929 கோடியாகக் குறைந்துள்ளது. விற்பனையைப் பொறுத்தவரையில், இந்த ஆண்டின் ஜூலை – செப்டம்பர் மாதங்களில் 44 சதவீத வீழ்ச்சி கண்டு மொத்தம் 28,938 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

நடுத்தர மற்றும்  கனரக வாகனங்கள் விற்பனை 56 சதவீதமும், இலகு ரக வாகனங்கள் விற்பனை 11 சதவீதமும் வீழ்ச்சி கண்டுள்ளன. அக்டோபர் மாதத்தில் 35 சதவீதம் வீழ்ச்சி கண்டு இந்நிறுவனம் மொத்தம் 9,857 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

அது மட்டுமல்ல வருவாய் விவரங்கள் வெளியான பின்னர், பங்குச் சந்தையில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்குகள் 0.13 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன. அதன் பங்கு ஒன்றின் விலை ரூ.76.60 ஆக இருக்கிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here