பெருமாள் எப்படி வருவார்?

0
522

சித்தர் இடைக்காடரிடம் ஒரு குடியானவர் கேட்டார்; “பெருமாள் தசாவதாரம் எடுத்தார்; நான் கூப்பிடும்போது எந்தப் பெருமாள் வருவார்?”

அதற்கு சித்தர் சொன்னார்: “ஏழை, இடையன், இளிச்சவாயன்”.

குடியானவர் கொஞ்சம் திகைத்துப் போனார். இதில் என்ன அர்த்தம் பொதிந்துள்ளது என்று சிந்தித்தவர் தெரிந்தவர்களிடம் விளக்கம் கேட்டார்.

அப்போது அதன் அர்த்தம் புலப்பட்டது; ஏழையாக வாழ்ந்த ராமரும், இடையனாக வாழ்ந்த கண்ணனும், இளிச்ச வாயனான (வாயை இளித்து ஹிரண்யனைப் பிளந்த) நரசிம்மரும் வருவார்கள்.

இதனை உங்கள் அன்றாட வாழ்வுடன் பொருத்திப் பாருங்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்