இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஷில்பா ஷெட்டி. தமிழில் இவர் பிரபு தேவாவுடன் நடித்து வெளியான படம் ‘மிஸ்டர்ரோமியோ’. இவர் தமிழ், இந்தி தவிர தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். பிக் பிரதர்ஸ் நிகழ்ச்சியில் இவர் இனவெறிக்கு ஆளான சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடைசியாக 2007ஆம் ஆண்டு வெளியான ‘அப்னே’ என்ற இந்தி படத்தில் தர்மேந்திரா, சன்னிதியோல் ஆகியோருடன் நடித்து இருந்தார். அதன் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

ஷில்பா ஷெட்டி தொழில் அதிபர்ராஜ் குந்த்ராவை காதலித்து 2009ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். இந்தியில் சபீர்கான் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத நகைச்சுவை படத்தில் நடிக்க ஷில்பாஷெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.  

இந்நிலையில், விளம்பர நிறுவனம் ஒன்று  உடல் எடையை குறைக்கும் ஆயுர்வேதமருந்து விளம்பர படத்தில் நடிக்க ஷில்பாவை ஒப்பந்தம் செய்ய முயற்சித்துள்ளனர். இதற்காக அவருக்கு ரூ.10கோடி சம்பளம் தருவதாகவும் பேசினர்.

ஆனால் அதில்நடிக்க ஷில்பா ஷெட்டி மறுத்துவிட்டார். இது குறித்து அவர் கூறும்போது, “எனக்குநம்பிக்கை இல்லாத விஷயங்களில் நடிக்க நான் விரும்பமாட்டேன். மாத்திரைகள் தற்காலிக தீர்வுதான். சரியானஉணவு மற்றும்உடற்பயிற்சியால் மட்டுமே எடைப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்” என்றார்.