பெப்சி சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி விடுத்த வேண்டுகோளை மறுபடியும் அஜித் கண்டுகொள்ளவில்லை.

தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்துவதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறார் அஜித். இன்டோர் காட்சிகள், ஸ்டுடியோவில் அரங்கு அமைத்து எடுக்கப்படும் காட்சிகள் எதுவாக இருந்தாலும் ஹைதராபாத் இல்லை மும்பையில் வையுங்கள் என்பதே அஜித்தின் வேண்டுகோளாக உள்ளது. அஜித்தின் கால்ஷீட் கிடைப்பதே அரிது என்பதால் தயாரிப்பாளர்கள் அவரது வேண்டுகோளை மறுப்பதில்லை.

விசுவாசம் படத்துக்காக ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடத்தினர். சென்னையில் தேவையான ஸ்டுடியோக்கள் இருக்கையில் ஹைதராபாத்தில் உள்ள ஸ்டுடியோவில் அரங்கு அமைப்பது சரியா? இப்படி வெளிமாநிலங்களில் தமிழ்ப்பட படப்பிடிப்புகளை நடத்தினால் தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்குமா? என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார். அதற்கு விசுவாசம் தரப்பிலிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை.

முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த விசுவாசம் டீம் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக மும்பை செல்கிறது. செல்வமணியின் கோரிக்கையை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது என்கிறார்கள். இன்னும் சிலரோ, கதை மும்பையில் நடந்தால் மும்பை சென்றுதானே படப்பிடிப்பு நடத்த முடியும் என்று கேட்கின்றனர்.

அரங்கு அமைத்து எடுக்கிற காட்சிகளுக்கு ஹைதராபாத், மும்பை என்று செல்லாமல் சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களிலேயே அரங்கு அமைக்கலாமே என்பதே பெப்சியின் கேள்வி.

அஜித் அதற்கு செவிகொடுப்பதுபோல் இல்லை.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்