பெண் பணியாளர்களை இழிவு படுத்திய கென்ட்: கொதித்தெழுந்த நெட்டிசன்கள், மன்னிப்பு கேட்ட நிறுவனம்

0
199

வீட்டு வேலை செய்யும் பெண் பணியாளர்களை இழிவுபடுத்துவது போல விளம்பரம் வெளியிட்ட கென்ட் நிறுவனம், கடும் எதிர்ப்புக்குப் பின் மன்னிப்பு கோரியுள்ளது.

மாவு பிசையும் இயந்திரம் ஒன்றுக்கு அவர்கள் வெளியிட்ட விளம்பரத்தில், “ரொட்டிக்கு மாவு பிசைய பெண் பணியாளர்களை அனுமதிக்கிறீர்களா? அவர்களின் கைகளில் தொற்று இருக்கலாம். அதனால் எங்கள் நிறுவனத்தின் இயந்திரத்தைப் பயன்படுத்துங்கள்,” என கென்ட் நிறுவனம் கூறியிருந்தது.

இதற்கு சமூக ஊடகத்தில் பரவலாக எதிர்ப்புகள் எழுந்தன.

டுவிட்டர் இவரது பதிவு @prabhurazdan: #Covid infection has exposed ugly faces of many greedy companies also. Worst adv by @KentROSystems questioning purity of women's hands. @RenuWBhatia1 @sharmarekha @smritiirani

கர்நாடக இசை கலைஞர் மற்றும் செயற்பாட்டாளர் டி.எம். கிருஷ்ணா பகிர்ந்த ட்வீட்டில், இது நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடாது. ஏனெனில் இதுதான் நாம் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

டுவிட்டர் இவரது பதிவு @tmkrishna: This should not surprise us because this is who we are

பெண்ணுரிமை செயல்பாட்டாளர் ஜப்லின் பஸ்ரிசா பகிர்ந்த ட்வீட்டில், சாதிய வன்மம் நிறைந்த விளம்பரம் இது. இந்த விளம்பரத்திற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

டுவிட்டர் இவரது பதிவு @japna_p: Hi #Kent @KentROSystems, what casteist classist bullshit is this?? You should be ashamed of yourself for putting this ad out.

இது போல பல்வேறு தரப்பினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்த சூழலில், கென்ட் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

டுவிட்டர் இவரது பதிவு @KentROSystems: Please accept our sincere apologies for having published the Ad of Kent Atta & Bread Maker. It was unintentional but wrongly communicated and it has been withdrawn. We support and respect all sections of the society.Mahesh Gupta, Chairman

அவர்கள் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “எங்களது மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். உள்நோக்கமற்ற. எந்த உள்நோக்கத்துடனும் அந்த விளம்பரத்தை வெளியிடவில்லை. அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். சமூகத்தின் அனைத்து தரப்பையும் நாங்கள் மதிக்கிறோம்,” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி : பிபிசி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here