‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற மோடி அரசு ‘குற்றவாளிகளை பாதுகாப்போம்’ என்று களத்தில் குதித்துள்ளது – ராகுல் காந்தி

How it started: Save Girl child. How it’s going: Save criminals,’ the former Congress president said in a tweet

0
140

 

உத்தரப்பிரதேசத்தில் பலாத்காரக் குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரை பாஜக எம்எல்ஏவும், அவரின் மகனும், பாஜக ஆதரவாளர்களும் சேர்ந்து காவல் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த அந்த குற்றம்சாட்டப்பட்ட நபரை அழைத்துச் சென்றதாக செய்திகள் நாளேடுகளில் வெளியானது.

https://www.news18.com/amp/news/india/bjp-mla-his-son-barge-into-up-police-station-walk-away-with-man-arrested-for-eve-teasing-2974748.html?__twitter_impression=true&s=08

இந்தச் செய்தியை  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்  பெண் குழந்தைகளைக் காப்போம் என்ற ரீதியில்  பிரச்சாரத்தை துவக்கிய மோடி அரசு  குற்றவாளிகளைக் காப்போம் என்று களத்தில் குதித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்   

பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ பெண் குழந்தைகளைக் காப்போம் அல்லது கிரிமினல்களை பாதுகாப்போம். இதில் எந்தப் பிரச்சாரம், இயக்கம் யாருடைய ஆட்சியில் தொடங்கப்பட்டது என்று உத்தரப்பிரதேச முதல்வர் கூறுவாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹாத்தரஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19வயதுப் பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு, அந்த பெண்ணை போலீஸார் பெற்றோரின் சம்மதமில்லாம போலீசாரே உடலை எரித்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here