உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஷாஜகான்பூர் பூங்காவில் பெண் தோழியுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை “ஆன்ட்டி-ரோமியோ” அணியினர் பிடித்து காவல்துறையினர் முன்னிலையில் மொட்டை அடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : “பெண்கள் இரவு நேரங்களில் பணிபுரிவதை ஐடி நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும்”

கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி நடந்துள்ள இச்சம்பவத்தின் வீடியோ வெள்ளிக்கிழமையன்று வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞர், ”நாங்கள் தவறாக எதுவும் நடந்து கொள்ளவில்லை. என்னை விடுங்கள் நான் என் தோழியுடன் செல்ல வேண்டும்” என காவலர்களிடம் வேண்டுவதுபோல் உள்ளது.

இதையும் படியுங்கள் : ”இது இந்திய விவசாயிகளின் பிரச்சினை”

இதுகுறித்து ஷாஜகான்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் கே.பி.சிங் “இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும். மேலும் இதில் சம்பந்தப்பட்ட சுஹேல் அகமது, லயிக் அமகமது மற்றும் சோனு பால் ஆகிய காவலர்கள் கடமைத் தவறிய குற்றத்திற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : மதுரை: ஹெல்மட் கட்டாயம்; அமலுக்கு வந்தது

கருத்துகள் இல்லை