உடலில் முடி. அனைவருக்கும் இது உள்ளது.”

இந்த சாதாரண விஷயம், அமெரிக்காவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பெண்கள் தங்கள் உடலில் உள்ள முடியை ஷேவ் செய்வதைக் காட்டும் ஒரு புதிய ரேஸர் விளம்பரம் சமீபத்தில் வெளியானது. இதுதான் இந்த விவாதத்தின் தொடக்கப்புள்ளி.

நிச்சயமாக அது புரட்சிகரமான விளம்பரம் அல்ல. ஆனால், வழக்கமான ரேஸர் விளம்பரங்களில் ஏற்கனவே முற்றிலும் மென்மையானதாக இருக்கும் பெண்களின் கால்களே காட்டப்படும்.

ரேஸர் விளம்பத்தில் பெண்களை முடியுடன் காட்டுவது 100 வருடத்தில் இதுவே முதல் முறை என ரேஸர் நிறுவனமான பில்லி கூறுகிறது. இதன் விளைவாக இந்த விளம்பரம் வைரல் ஆனது.

இந்த விளம்பரத்தில் பெண்களின் கால், கழுத்து, வயிற்றில் உள்ள முடிகள் நெருக்கமாகக் காட்டப்பட்டுள்ளதை பல பெண்கள் சமூகவலைத்தளத்தில் பாராட்டியுள்ளனர்.

” இது மிகவும் அழகாக இருக்கிறது” என ஒரு பெண் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.

”உடலில் முடி இருந்தால் வெட்கப்பட வேண்டும் என்ற கருத்து உருவாக்கப்படுகிறது.. பெண்களுக்கு, முடியற்ற உடல் இருப்பதாக அனைத்து நிறுவனங்களும் நிறுவமுயலும்போது, இந்த விளம்பரம் உண்மையைப் பிரதிபலிக்கிறது” என பில்லி நிறுவனத்தின் இணை நிறுவனர் கூலி கூறியுள்ளார்.

உடல் முடி பற்றி இன்னும் நேர்மறையாக நினைக்க, இந்த விளம்பரம் உதவுவதாக இதனை ஆதரிக்கும் பெண்கள் கூறுகின்றனர்.

இந்த விளம்பத்திற்குப் பெருகும் ஆதரவுக்கு மத்தியில், உடலில் முடிகள் இருப்பதைச் சமூகம் இழிவாக கருதுவதை ஏன் இந்த ரேஸர் விளம்பரம் மாற்ற முயல்கிறது என சிலர் கேட்டுள்ளனர்.

” ஷேவ் செய்வது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். பெண்கள் தங்கள் முடியை என்ன செய்ய வேண்டும் என யாரும் பெண்களிடம் சொல்ல முடியாது” என்கிறார் கூலி.

” நம்மில் சிலர் முடியை எடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். சிலர் முடியைப் பெருமையுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். நமது முடிவுக்காக வருத்தப்படக்கூடாது” என்கிறார் அவர்.

Courtesy : bbc tamil

இதையும் படியுங்கள்

video

https://www.youtube.com/watch?v=HrBcY3Ey38c&t=25sஇதையும் படியுங்கள்: எம்.ஜி.ஆர் 100: இவரைப் பற்றி மலையாளிகள் என்ன நினைக்கிறார்கள்?பணக் கஷ்டத்திலிருக்கும் இப்போதுவுக்கு கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி நன்கொடை வழங்குங்கள்:

“எனக்கு அப்போது 14 வயது; மெக் டொனால்ட்ஸ் கடையில் பகுதி நேரமாக வேலை செய்து வந்தேன்; எனது கடை ஓனர் ரிபப்ளிகன் கட்சியில் இருந்தார்; எனது துறுதுறுப்பும் வேகமும் அரசியலுக்குப் பொருத்தமாக இருக்குமென்று...

பேரா.அ.மார்க்ஸின் “ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும்” கட்டுரைத் தொகுப்பு உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. ஒவ்வொரு கட்டுரையும் மோடி அரசின் இந்துத்துவப் போக்கையும் சனநாயக விரோதங்களையும் அம்பலப்படுத்துகிறது. அ.மா.வைப் பொறுத்தமட்டில் மோடி அரசு என்பதல்ல, இந்தியாவின்...

பிப்ரவரி 9, 2017; அ.இ.அ.தி.மு.கவின் (ஓ.பன்னீர்செல்வம் அணி) அவைத் தலைவர் இ.மதுசூதனன் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்; ”கட்சியை நடத்துவதற்கான பணம் சசிகலாவிடம்தான் இருக்கிறது என்று அவரைக் கட்சியின் பொதுச்செயலாளராகும்படி கேட்டுக்கொண்டேன்” என்று சொல்கிறார். இன்னொரு...

ஏன்யா.. முட்டாப் பயலுவளா சல்லிக்கட்டுக் காளைய கொடுமைப் படுத்துதோமுன்னு சொல்லுதியளே; அந்தக் காளைய நாங்க எப்படி வளக்கோமுன்னு தெரியுமாய்யா உங்களுக்கு…. காலையிலேயே கம்மாக்குக் கூட்டிட்டுப் போயி குளிப்பாட்டி நெத்தியில பொட்டு வச்சி,...

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்