பெண்களுக்கு துப்பட்டா அவசியம், ஆண்கள் டிசர்ட் கூடாது.. அரசு ஊழியர்களுக்கு கிரிஜா வைத்தியநாதன் அதிரடி உத்தரவு

0
2074

அரசு ஊழியர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது –

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அலுவலகத்தின் நல்லொழுக்கம் பாதிக்காத வகையில் பணியிடத்துக்கு ஏற்றவாறு சுத்தமான, முறையான ஆடைகளை அணிய வேண்டும்.

இதன்படி, புடவை அல்லது சல்வார் கமீஸ், துப்பட்டாவுடன் கூடிய சுடிதாரை பெண் ஊழியர்கள் பணியில் இருக்கும்போது அணிய வேண்டும். அடிக்கும் நிறம் கூடாது அதேபோல் அவர்கள் உடுத்தும் ஆடையின் நிறம் மெல்லிய நிறத்தில், அதாவது, லைட் கலரில் இருக்க வேண்டும். அடிக்கும் கலரில் கண்கள் கூசும்படி இருக்கக்கூடாது 

ஆண் ஊழியர்கள் சட்டை மற்றும் பேண்ட்  அணிய வேண்டும். அதுவும்  கேஷூவல் ஆடைகளை அணியாமல் ஃபார்மல் ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும்.

நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது நீதித் துறையைச் சார்ந்த மன்றங்களில் ஆஜராக வேண்டியிருந்தால் முழுக்கையுடன் கூடிய கோட், திறந்த வகையிலான கோட்டை அணிய விரும்பினால் ‘டை’  கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். பெண் அதிகாரிகளாக இருந்தால் புடவை அல்லது சல்வார் கமீஸ் அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here