பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 48 பேர் சிக்கியுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (Association for Democratic Reforms) தெரிவித்துள்ளது.

1. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் மீதான வழக்குகள், சொத்து விவரம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து அதற்கான அறிக்கைகளை ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

2. அதன்படி, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வேட்புமனு தாக்கலின்போது அளித்த பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில், 1,580 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 48 பேர் மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள் பதிவாகியுள்ளன.

3. இதில் மூன்று பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர். மீதமுள்ள 45 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர்.

4. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் பாஜகவைச் சேர்ந்தவரகள். சட்டமன்ற உறுப்பினர்களில் பாஜகவைச் சேர்ந்த 12 பேர் மீதும், சிவசேனாவைச் சேர்ந்த ஏழு பேர் மீது, திரினாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளன.

5. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்களே அதிகம். இம்மாநிலத்தில் 12 பேர் மீதும், மேற்கு வங்க மாநிலத்தில் 11 பேர் மீதும், ஒடிசா மற்றும் ஆந்திராவில் தலா ஐந்து பேர் மீதும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here