பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் ; நாட்டிலேயே உத்தரப்பிரதேசத்தில் அதிகம் பதிவு

0
276

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தால் (NCW) கடந்த ஆண்டு 31,000 புகார்கள் பெறப்பட்டுள்ளது .  2014-க்குப் பிறகு அதிகபட்சமாக, அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவை. 

இதையும் படியுங்கள் : 👇

23,722 புகார்கள் பெறப்பட்ட 2020 உடன் ஒப்பிடும்போது 2021 இல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்கள் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகாரபூர்வ  தரவுகளின்படி, 30,864 புகார்களில், அதிகபட்சமாக 11,013 புகார்கள் கண்ணியத்துடன் வாழும் உரிமை தொடர்பானவை, அதைத் தொடர்ந்து 6,633 புகார்கள் குடும்ப வன்முறை மற்றும் 4,589 புகார்கள் வரதட்சணை துன்புறுத்தல் தொடர்பானவை 

கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சுமார் 31,000 பதிவாகியிருப்பதாகவும், கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பார்த்திராத எண்ணிக்கையாக இது இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : 👇

இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் 2021ஆம் ஆண்டில் மட்டும்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 31,000 அளவுக்குப் பதிவாகியுள்து. இதில், பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் உத்தரப்பிரதேசத்தில் பதிவாகியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் 15,828 ஆகப் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லியில் 3,336 ஆகவும், மகாராஷ்டிரத்தில் 1,504, ஹரியானாவில் 1,460 மற்றும், பீகாரில் 1,456 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here