’பெண்களால் இயக்கப்படும் முதல் ரயில் நிலையம் இது’

0
374

ராஜஸ்தான் மாநிலத்தில் ரயில்நிலையம் ஒன்றை பெண்களே தங்களது கட்டுப்பாட்டில் இயக்கி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரின் காந்திநகரிலுள்ள ரயில் நிலையம் பெண் ஊழியர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ரயில் டிக்கெட் கொடுப்பது, டிக்கெட் பரிசோதிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் சேர்த்து பெண்கள் 40 பேர் பணிபுரிந்து வருகின்றனர். நீலம் ஜாதவ் என்னும் பெண் ஊழியர், இந்த நிலயத்தின் முதல் பெண் ரயில் நிலைய கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். நாளொன்றுக்கு மூன்று ஷிஃப்டுகள் மூலம் 40 ஊழியர்களும் பணிசெய்து வருகின்றனர். இதில் ஆறு பேர் ரிசர்வேஷன் கவுண்டர்களிலும், நான்கு பேர் ரயில்களை இயக்கும் பொறுப்பிலும், எட்டு பேர் பயணச்சீட்டு பதிவுப் பிரிவிலும் வேலை பார்த்து வருகின்றனர்.

நன்றி: ANI

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்