கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்நிலையில் 2013-ம் ஆண்டு பெட்ரோல் விலை உயர்ந்த போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசே காரணம் என்று குற்றம் சாடிய நிர்மலா சீதாராமன் தற்போது விலை உயர்வுக்கும் மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறி இருப்பது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. இரண்டு பேட்டிகளையும் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2013-ம் ஆண்டு பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேசிய அவர்; பெட்ரோல் விலை உயர்வால் சாமானிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமைகளை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி பெட்ரோல் விலையை 7 ரூபாய்க்கு மேலாக உயர்த்தி இருக்காது. என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது; இந்தியாவில் உள்ள பெட்ரோல் நிறுவனங்களே பெட்ரோல் விலையை அதிகரிப்பதா அல்லது குறைப்பதா என்பது குறித்த முடிவுகளை எடுக்கும் ஏனெனில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் இருந்து,
சுத்திகரிப்பு செய்து விநியோகம் மற்றும் போக்குவரத்துக்கான செலவுகள் என அனைவற்றையும் அவையே ஏற்கின்றன. எனவே பெட்ரோல் விலை நிர்ணயம் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. என தெரிவித்துள்ளார்.