கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவைகளை அடிப்படையாக வைத்து, பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயித்து வந்தன. தற்போது அந்த நடைமுறையை மாற்றி தினந்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறை வெள்ளிக்கிழமை (ஜூன்.16) முதல் அமலாகவுள்ளது. இதனையடுத்து, பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ஒரு ரூபாய் 12 காசுகளும், டீசல் விலையில் லிட்டருக்கு ஒரு ரூபாய் 24 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலைக் குறைப்பு வெள்ளிக்கிழமை காலை ஆறு மணி முதல் அமலுக்கு வருகிறது.

இதையும் படியுங்கள் : குழந்தைகள் முன் சண்டை போடக் கூடாது – கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்