பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை பெட்ரோலிய டீலர்களிடம் வருகிற 2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நரேந்திர மோடியின் படத்தை ஒவ்வொரு பெட்ரோல் நிலையங்களிலும் வைக்க வேண்டும் என்று கேட்டது. இந்த ஆலோசனையை இந்திய பெட்ரோலியம் டீலர்களின் கூட்டமைப்பு பின்பற்றவில்லை என்றால் சப்ளை நிறுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பெட்ரோல் நிலையங்களில் வைக்குமாறு உத்தரவிடுகின்றனர். இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு சப்ளை நிறுத்தப்படும் என்ற மறைமுக அச்சுறுத்தலும் விடுக்கப்படுகிறது என்று இந்திய பெட்ரோலியம் டீலர்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.கோகி தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து ஒரு பெட்ரோல் நிலையத்தில் வைக்கப்பட்ட விளம்பரப் பலகையில் ஏதோ ஒரு அமைப்பு அல்லது யாரோ ஒருவர் “நரேந்திர மோடியின் வசூல் மையம்” என்று எழுதி வைத்துள்ளார்கள்.

மஞ்சள் பின்னணியில், கருப்பு நிறத்தில் இந்தியில் எழுதப்பட்டிருப்பதில், ‘நரேந்திர மோடியின் வசூல் மையம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது . இந்தியில் நரேந்திர மோதி வசூலி கேந்திரா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6

இதனை அவ்வழியாகப் போவோர் வருவோரெல்லாம் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

இதேபோல மும்பையில் சிவசேனா ஒரு பெரிய விளம்பரப்பலகை வைத்திருக்கிறது.அதில் நரேந்திர தேவேந்திர வசூல் மையம் என்று எழுதப்பட்டிருக்கிறது . மஹாராஷ்டிராவில் தேவேந்த்ர பட்னாவிஸ் ஆட்சியில் இருப்பதால் நரேந்திர தேவேந்திர வசூல் மையம் என்று எழுதப்பட்டிருப்பது மக்களை கவர்கிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here