சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.06 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.91 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் எரிபொருள் தேவை பெருமளவில் இறக்குமதி மூலமே நிறைவு செய்யப்பட்டு வரும் நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் அதன் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது.  

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 23 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.77.06 ஆகவும், டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து ரூ.70.91 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

கடந்த ஒரு வாரமாக பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்வது வாகன ஓட்டிகள், விவசாயிகள் மற்றும் சாமானிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.