பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

0
378

சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை (ஆக 9) பெட்ரோல், டீசல் முறையே லிட்டருக்கு 16 மற்றும் 12 காசுகள் குறைந்துள்ளது. 

சுமார் 15 ஆண்டுகளாக  எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைக்கும் நடைமுறை  கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைவிடப்பட்ட நிலையில், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.87 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.69.47 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here