ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழ்க்கைத் தரம் பாதிப்படையச் செய்யும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ஐந்து காசுகள் அதிகரித்தும், டீசல் விலையில் லிட்டருக்கு ஒரு ரூபாய் 26 காசுகள் உயர்த்தியும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கம் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டதாகும் என்றும், இந்தக் காரணிகளுக்கும் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பு என்ற காரணத்தின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிப்பதும், மாற்றப்பட வேண்டிய கொள்கை ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டீசல் விலை உயர்வு காரணமாக சரக்குக் கட்டணங்கள் அதிகரிக்கும் என்பதாலும், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வழி ஏற்படும் என்பதாலும் எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்