பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு

0
152

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை குறைக்கப்படுவதாக மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனம் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன. நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றது முதல் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடிவு செய்துள்ளதாக பாஜக மூத்தத் தலைவரும், மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் எனத் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here