பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.3 உயர்வு

Excise duty on petrol and diesel was on Saturday hiked by Rs 3 per litre as the government looked to mop up gains arising from fall in international oil prices.

0
306

சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

இந்த வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய மறைமுக வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,“பெட்ரோல் மீதானசிறப்பு கலால்வரி லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.8 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. டீசல் மீதானசிறப்பு கலால்வரி லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.4 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. கூடுதலாக சாலைவரியும் லிட்டருக்கு தலா ரூ.1 உயர்த்தப்பட்டு ரூ.10 ஆக நிர்ணயிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

இதனுடன் சேர்த்து மொத்தமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.22.98-ம், டீசலுக்குரூ.18.83-ம்கலால் வரியாக வசூலிக்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு மோடி அரசு பதவி ஏற்றபோது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வரியாகரூ.9.48-ம், டீசலுக்கு ரூ.3.56-ம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வரி உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.39 ஆயிரம் கோடி கூடுதல் வருவாயாக கிடைக்கும். இந்த நிதி ஆண்டில் எஞ்சியுள்ள 3 வாரங்களுக்கு மட்டும்ரூ.2 ஆயிரம் கோடிக்கு சற்று குறைவாக கிடைக்கும்.

இந்த வரி உயர்வு சமீபத்தில் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை சரிவு மூலம் சரிசெய்யப்படுகிறது. இதனால் விற்பனை விலையில் உயர்வு இருக்காது என்று அதிகாரிகள் கூறினர்.

தினசரி விலைமாற்றம் அடிப்படையில் டெல்லியில்பெட்ரோல் விலை13 பைசா குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.69.87 ஆகவும், டீசல்16 பைசா குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.62.58 ஆகவும் உள்ளது.

2014 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2016 ஆம் ஆண்டு ஜனவரி வரை மத்திய அரசு இதேபோல கச்சா எண்ணெய் விலை சரிவின் ஆதாயத்தை 9 முறை கலால் வரியை உயர்த்தியதன் மூலம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

சர்வதேசசந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து, பேரல் ஒன்று 36 டாலராகச் சரிந்தது. இந்த விலை வீழ்ச்சி கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு இணையாக வந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.8வரை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனால், விலையைக் கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு முன்பாகக் குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளது.

இந்த வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜய்மக்கான் கூறியதாவது :

பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினரான நிலேஷ்ஷாவே, கச்சா எண்ணெய் விலை சரிவு பலனை நுகர்வோருக்கு வழங்காததால் மத்திய அரசு ரூ.3.4 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது என்று கூறியிருக்கிறார்.

மோடி அரசு கலால் வரி உயர்வை திரும்பப் பெற்று, கச்சா எண்ணெய் விலைசரிவு பலன்களை நுகர்வோருக்கு வழங்க வேண்டும். இந்த வரிகளால் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் உள்ளது. இதனால் போக்குவரத்து கட்டணம் அதிகரித்து அனைத்து பொருட்களும் விலை உயர்கிறது, பண வீக்கமும் ஏற்படுகிறது.

மோடி அரசுபதவியேற்ற 2014 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை ஒருடஜன் முறைகளுக்கு மேல்கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் வரிகளின் மூலம் மட்டுமே மத்திய அரசு ரூ.20லட்சம் கோடி வசூலித்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைந்தபட்சம் 35-40 சதவீதம் குறைக்க வேண்டும் என அவர் கூறினார்.

கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெட்ரோல், 
டீசல் மீது கலால் வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டது. இப்போது கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.17.98, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.13.83 என உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here