பயணிகள் வருகை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், பெங்களூரு – சென்னை இடையே இயக்கப்பட்டு வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக இயக்கப்படாமல் இருந்த ரயில் சேவைகள் கடந்த சில மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக இயக்கப்பட்டு வருகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டாலும், பயணிகள் ரயிலில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ரயில் மற்றும் விமான நிலையம் செல்ல வேண்டிய பயணிகளுக்கு மட்டும் ரயிலில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. லாக்டவுன் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் தான் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் பெங்களூரு – சென்னை இடையேயான சகாப்தி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், “தீபாவளி, துர்கா பூஜை பண்டிகைகளையொட்டி பெங்களூரு – சென்னை இடையே இருமார்க்கமாக சகாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்யவில்லை. இதனால் நவம்பர் 21-ம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும்வரை சகாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here