பெங்களூருவில் தலைமறைவான கொரோனா நோயாளிகள்

Bengaluru urban reported the highest COVID-19 cases in the State with 1,243 cases, Mysuru (374), Ballari (253), Davanagere (225), Kalaburagi (196), Raichur (165), Dharwad (157), Bagalkote (147), Dakshina Kannada (146), Vijayapura (139), Hassan (126), Koppala (110), Kolar (100) and Udupi (90).

0
147

இந்திய அளவில் கர்நாடகா மாநிலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் சென்னையில் ஜூன் மாதத்தில் இருந்ததை போன்று தொற்றுப் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தினமும் சராசரியாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் தவறான முகவரி, தவறான செல்போன் உள்ளிட்ட தகவல்களை மாநகராட்சியிடம் கொடுத்தனர். இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளான 4 ஆயிரத்து 327 பேர் கடந்த 7 ஆம் தேதி வரை சுகாதாரத்துறையின் கைக்கு சிக்காமல் தலைமறைவாக இருந்தனர்.

இதனால், அந்த கொரோனா நோயாளிகளால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் பீதி உருவானது. பெரும்பாலானோர் கொரோனா பாதிப்பு உறுதியானதும், தங்களது மொபைல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாக இருந்தனர். தவறான முகவரியை அளித்தவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதிலும் அவர்கள் உரிய சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைக்கு செல்லாமலே இருந்தனர்.

இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், தலைமறைவாக உள்ள கொரோனா நோயாளிகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, மருத்துவமனையில் அனுமதிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த முயற்சியில் மாநகராட்சியின் சுகாதாரத் துறையினர் வெற்றியும் கண்டுள்ளனர்.

அதாவது தலைமறைவாக இருந்த 4 ஆயிரத்து 327 பேரில், 3,300 கொரோனா நோயாளிகள் காவல்துறையின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் மருத்துவமனையிலும், பலர் கொரோனா மையத்திலும், மேலும் சிலர் வீட்டு தனிமையிலும் வைக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா அறிகுறி இருப்பவர்கள் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைமறைவாகி விட்ட மற்றவர்களை பிடிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here