பூமியைக் காப்பாற்ற ஆல் இந்தியா ரேடியோவில் ஒரு நிகழ்ச்சியைக் கேளுங்கள்

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது ஒவ்வொருவரது பொறுப்புமாகும்

0
409

மனிதனின் பல்வேறு நடவடிக்கைகளால் புவி வெப்பமடைந்து கொண்டே வருகிறது. அதனால், கடும் குடிநீர் பற்றாக்குறை, வரலாறு காணாத வெள்ளம், காலம் தவறிய பனிப்பொழிவு, காடுகள் அழிந்ததால் ஏற்படும் கடும் வறட்சி.

இதைக் குறைப்பதில், தடுப்பதில் ஒவ்வொரு தனிமனிதரின் பங்கு என்ன?
சென்னை வானொலி வழங்கும்
“புவிவெப்பம் தணிப்போம்
பூமியைக் காப்போம்” – தொடர்
இதற்கு விடை தேட முயற்சிக்கிறது.
மார்ச் 19-ம் தேதி திங்கள் முதல் 23-ம் தேதி வெள்ளி வரை சென்னை அலைவரிசை ஒன்றில் காலை 7.30க்கு ஒலிபரப்பாகும் இந்தத்தொடரை, சூழல் ஆர்வலர் முனைவர் ரமா கஷ்யப் அவர்கள் நெறிப்படுத்துகிறார்.

இத்தொடரில் காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அலுவலர் டி.கே. ஓஜா, சூழல் ஆர்வலர், எழுத்தாளர் எஸ். தியோடர் பாஸ்கரன், பத்திரி கையாளர் பீர் முகமது, கடல் உயிரியல் ஆய்வாளர் T.D. பாபு, சமூகப்பணிகள் துறை பேராசிரியர்கள் முனைவர் நிர்மலா அலெக்ஸ், கே.எஸ். ரமேஷ் உள்ளிட்ட பல சுற்றுசூழல் பற்றாளர்கள் பங்கேற்கிறார்கள்.

இத்தொடரை மார்ச் 19ம் தேதி முதல் 23-ம் தேதிவரை 101.4 FM.ரெயின்போ அலைவரிசையில் காலை 8.02 மணிக்கும், 100.1 FM Gold அலைவரிசையில் மாலை 6.00 மணிக்கும் கேட்கலாம்.

ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்; இங்கே, இப்போதே உதவுங்கள்

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்

பருவநிலை மாற்றம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here