அமெரிக்காவில் டிக்டாக் வீடியோவுக்காக பூமிக்குள் வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஸகாரியா மெலன்(Zacharia Mellon), யோமிங்கின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர். இவர் டிக்டாக் வீடியோ வெளியிடுவதில் அதீத ஆர்வம் கொண்டவர். சுவாரசியமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த ஸகாரியா புறநகர் பகுதிக்குச் சென்றார்.
குறிப்பிட்ட நிலப்பகுதியை தேர்ந்தெடுத்த அவர், அங்கு 280 துளைகள் இட்டு அதில் வெடிமருந்துகளை நிரப்பி தொடர் இணைப்பின் மூலம் வெடிக்கச் செய்தார். ஸகாரியாவின் இந்த வீடியோ தற்போது டிக்டாக்கில் வைரலாகி வருகிறது.
(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)