நாம் அன்றாடம் சமையலில் சேர்க்கும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதிக நன்மைகள் உண்டு.

ஆண்கள் பூண்டு சாப்பிடுவது அவர்களது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நம்பப்படுகிறது.

பூண்டு சாப்பிடுவதால் வயிற்றுப் பிரச்சினைகளும் நீங்குவதுடன் அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.

பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் அதிகரிப்பது குறைந்து, இதய நோய் வருவது தடுக்கப்படும்.

நிமோனியா, நெஞ்சு சளி, ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினைகளைப் போக்கும் சக்தியும் பூண்டுக்கு உள்ளது.

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பூண்டின் மருத்துவ பங்கு முதன்மையானது.

பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது. இரத்தக் குழாயில் கொழுப்புப் படியாது.

மருத்துவர்கள் பூண்டைப் பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறைவது மட்டுமின்றி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்கின்றனர். பூண்டைப் பாலில் காய்ச்சியும், ஊறுகாயகவும், லேகியமாகவும் செய்து தொடர்ந்து சாப்பிட்டால் ஊளைச் சதை குறையும். உடல் எடையும் குறையும்.

பூண்டை வதக்கி வற்றல் குழம்பு வைத்துச் சாப்பிட குளிர் தொல்லை நீங்கும்.

எந்த ரூபத்தில் பூண்டை உண்டாலும் கபத்தை வெளியேற்றும், மலத்தை இளக்கும்.

குப்பபைமேனி இலையுடன் பூண்டை வைத்து அரைத்துச் சாறு எடுத்து, இச்சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறும்.

102 டிகிரிக்கு மேல் காய்ச்சல் வந்தால் வெள்ளைப்பூண்டு சாறை உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் நன்கு தேய்த்தால் காய்ச்சல் இறங்கும்.

பூண்டையும், சிறிது உப்பையும் சேர்த்துச் சாப்பிட — தீடீரென ஏற்படும் வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், நெஞ்சுக் கரிப்பு குறையும்.

பூண்டை வெல்லம் கலந்து சாப்பிட்டால் உடல் வலி மறையும்.

பூண்டுடன் சிறிது ஓமத்தை நசுக்கிப்போட்டு கசாயம் வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க குழந்தைகளின் வாந்தி, கொட்டாவி குறையும்.

வெள்ளைப் பூண்டு, வசம்பு, ஊமத்தை வேர் இவைகளைச் சம அளவு எடுத்து, நன்கு அரைத்து, நல்லெண்ணையில் கலந்து, காய்ச்சி நன்கு சிவந்து வரும்போது இறக்கி விடவும். இந்த எண்ணெயை ஆறாத புண்கள் காயத்தின் மீது பூசினால் ஆறிவிடும். பூண்டுத் தைலத்தை உடலில் தேய்த்து வர சருமத்தில் ஏற்படும் நமச்சல், அரிப்பு மறையும்.

121

பூண்டு, மிளகு, கரிசலாங்கண்ணிக் கீரை மூன்றையும் அரைத்துக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் நெல்லிக்காய் அளவு தொடர்ந்து சாப்பிட சோகை நோய் குணமாகும்.

பூண்டைப் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட மூலநோய் நீங்கும்.

ஒரு வெள்ளைப் பூண்டு, ஏழு மிளகு, ஒன்பது மிளகாய் இலை இவைகளைச் சேர்த்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டால் குளிர் காச்சல் போய்விடும்.

பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சில் ஏற்படும் வலி நீங்கும்.

பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும்.

பூண்டை நசுக்கி சுண்ணாம்பு நீரில் நனைத்துக் கட்ட நகச்சுத்தி குறையும்.

காய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருக நன்கு தூக்கம் வரும்.

பூண்டு, மிளகு, துத்தி இலைகளை ஒவ்வொன்றும் 50 கிராம் வீதம் எடுத்து, இத்தோடு 15 கிராம் வசம்பு சேர்த்து நன்றாக அரைத்துப் பெண்கள் மாதவிடாய் காலத்தில் சாப்பிட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறையும்.

பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம்(இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி குறையு‌ம்)

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

இதையும் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்