எல்லோர் வீட்டிலும் பூஜையறையில் சாமி படங்களை வைத்து வழிபடுவது வழக்கம். இருப்பினும் சில சாமிப் படங்களை வைத்து வழிபட கூடாது என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

அவை என்னவென்று பார்ப்போம்.

சனீஸ்வர பகவானின் படம் இல்லங்களில் வைக்கக்கூடாது.

நவ கிரகங்களின் படமும் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்க கூடாது.

சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படமும் வைத்து வழங்குவது கூடாது.

கோவணம் கட்டிய மொட்டைத்தலை தண்டாயுதபாணி படமும் வைக்க கூடாது.

தனித்த காளியும், கால கண்டன் படம் வைத்தல் ஆகாது.

தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம் வைக்க கூடாது.

ருத்ர தாண்டவமாடுவதும் கொடூர பார்வை கொண்ட படங்கள் வைக்க கூடாது.

தவ நிலையிலுள்ளதும் தலை விரி கோலங்களில் உள்ளதுமான அம்பிகை படங்கள் இல்லங்களில் வைப்பது தவறு.

மேலும் உடைந்த படங்கள், சிதைந்த சாமி சிலைகள் இவைகளை வீட்டில் வைத்து பூஜிக்க கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here