பூஜா vs ராஷ்மிகா : யாரு நம்பர்-1?

Rashmika Mandanna and Pooja Hegde in race to bag that biggie

0
135

தெலுங்கு சினிமாவில் கொடிகட்டிப் பறந்த  நடிகைகள் தற்பொது மூத்த தலைமுறையாக மாறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நடிகை அனுஷ்கா மூத்த நடிகையாகிவிட்டார். நடிகை சமந்தா திருமணம் செய்து கொண்ட நடிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்மாக விலக தொடங்கி உள்ளார். காஜல் அகர்வால் படவாய்புகள் அற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில், அடுத்தபடியாக தெலுங்கு சினிமாவில் நம்பர்-1 நடிகை இடத்தை பிடிப்பதில் 90’kids பூஜா ஹெக்டே, ராஷ்மிகா இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பூஜா ஹெக்டே கடந்த ஆண்டு இரண்டு வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், ராஷ்மிகாவும் ஒரு வெற்றி படத்தில் நடித்துள்ளார். அடுத்தபடியாக அல்லு அர்ஜூனுடன் நடித்து வரும் பீஷ்மா படமும் தனக்கு ஹிட் படமாக அமையும் என எதிர்பார்த்திருக்கிறார்  ராஷ்மிகா. இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டே ஹிந்தியிலும் கவனத்தை திருப்பியிருக்கிறார். என்றாலும் தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இப்படி அவர் இரண்டு பக்கம் கவனம் செலுத்துவதால் தான் டோலிவுட்டில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்தி கூடுதல் படங்களை கைப்பற்றி நம்பர் ஒன் நாயகியாகி விட வேண்டும் என அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களை கைப்பற்றுவதில் தீவிரமடைந்துள்ளார் ராஷ்மிகா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here